'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
அமலாபால் அறிமுகமான வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, இருவர் உள்ளம், தொட்டால் தொடரும் படங்களை தயாரித்தவர் துவார்.ஜி.சந்திரசேகர். இவர் தற்போது தயாரித்துள்ள படம் பார்க்கணும்போல இருக்கு. இதனை விஜய் நடித்த சுறா படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இயக்கி உள்ளார், பரதன், த்ரிஷ்யம் ஹன்சிபா, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளார்.
இந்தப் படம் தயாராகி ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. நான்கு முறை ரிலீஸ் தேதி அறிவித்தும் சரியான தியேட்டர் கிடைக்காததால் வெளியிட முடியவில்லை. தற்போது விஷால் உதவியுடன் படம் வெளிவருகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் துவார்.ஜி.சந்திரசேகர் கூறியதாவது:
கஷ்டப்பட்டு படத்தை எடுத்து முடித்து விட்டேன். ஆனால் அதனை வெளியிட முடியவில்லை. சிறிய படம், சின்ன நடிகர்கள் என்று படத்தை தியேட்டர்காரர்கள் திரையிட மறுத்து விட்டார்கள். நான்கைந்து முறை ரிலீஸ் தேதி அறிவித்து விளம்பரம் செய்தும் படத்தை வெளியிட முடியவில்லை. தற்போது புதிதாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைவராக பொறுப்பேற்றுள்ள விஷால் சிறுபட்ஜெட் படங்கள் வெளிவர உதவப்போவதாக அறிவித்திருந்தார். இதனால் அவரைச் சென்று சந்தித்தேன். என் பிரச்சினைகளை கேட்டறிந்தார். படத்தை தயாராக வைத்திருங்கள். நான் சொல்கிற மாதிரி வெளியிடுங்கள் என்று கூறினார். தற்போது அவர் ஆலோசனைப்படி வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. என்றார் தயாரிப்பாளர் துவார்.ஜி.சந்திரசேகர்.