மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மோகன்லால் சமூக சேவைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளது போன்ற செய்திகள் பெரும்பாலும் ஊடகங்களிலும் வெளியானதில்லை. அதனால் ரசிகர்களும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை.. காரணம் அவர் யாருக்கேனும் உதவி செய்ய நினைத்தால் அதனை அவரது சொந்த வெப்சைட்டான 'தி கம்ப்ளீட் ஆக்டர்.காம்' நிர்வாகிகள் தங்களது வெப்சைட் நிர்வாகம் மூலமாக செய்து விடுகிறார்கள்.. அந்தவகையில் இந்த வெப்சைட் மூலம் இயங்கும் தொண்டு நிறுவனத்திற்கு தேவையான இன்னும் அதிகமான தொகையை திரட்டவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்..
இதற்காக அவர்கள் வேறு யாரிடமும் போய் உதவி கேட்கவும் விரும்பவில்லை.. தங்களது 'தி கம்ப்ளீட் ஆக்டர்.காமில் ஒரு புதிய பகுதியாக 'லால் ஸ்டோர்' என்கிற புதிய பிரிவை உருவாக்கியுள்ளனர். இந்த லால் ஸ்டோரில் மோகன்லால் எழுதிய புத்தகங்கள், அவரது திரைப்பட டிவிடிக்கள், அவர் படங்களில் உபயோகப்படுத்திய பொருட்கள், அவரது கையெழுத்திட்ட டீசர்ட்டுகள் என மோகன்லால் தொடர்புடைய, பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்..
ரசிகர்கள் தங்கள் விரும்பும் பொருட்களை, அதற்குண்டான தொகையை செலுத்தி ஆன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் கிடைக்கும் தொகை தி கம்ப்ளீட் ஆக்டர்.காம்' மூலம் இயங்கும் தொண்டு நிறுவனத்துக்கு செல்லும். இந்த லால் ஸ்டாரை சமீபத்தில் மோகன்லால் துவக்கி வைத்துள்ளார்.