இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
குழந்தை நட்சத்திரமாக இருந்து பின் கதாநாயகியாக மாறியவர் 'நள தமயந்தி' நாயகி கீது மோகன்தாஸ். நான்கு வருடங்களுக்கு முன் ஒரு இயக்குனராகவும் மாறி 'லையர்ஸ் டைஸ்' என்ற படத்தை இந்தியில் இயக்கியிருந்தார். இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்ததற்காக கீதாஞ்சலி தப்பா என்பவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும், இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளரும் கீது மோகன்தாஸின் கணவருமான ராஜீவ் ரவிக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் கிடைத்தது. தற்போது 'மூத்தோன்' என்கிற படத்தை இயக்குவதற்கான முன் கட்ட பணிகளில் தீவிரமாக இருக்கிறார் கீது மோகன்தாஸ்.
இந்தப்படத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார்.. கிட்டத்தட்ட மொட்டை அடித்த தலையுடன், பரட்டை தாடியும் மீசையுமாக, மூக்கில் 'புல்லாக்கு' குத்திக்கொண்டு பார்க்கவே வித்தியாசமான கெட்டப்பில் காட்சி தருகிறார் நிவின்பாலி.. யதார்த்தமும் மாய யதார்த்தமும் (நிஜமும் பொய்யும்) சந்திக்கும்போது என்ன நிகிழ்கிறது என்பதன் பின்னணியில் இந்தப்படம் உருவாக இருக்கிறதாம். வழக்கமான நடிப்பு போல அல்லாமல், இந்தப்படத்திற்காக நிவின்பாலிக்கு சிறப்பு நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறதாம். அதுல் மொரியா என்பவர் தான் நிவின்பாலிக்கு பாடி லாங்குவேஜ் உட்பட அட்வான்ஸ் ஆக்டிங் என்கிற புதிய நடிப்பு பயிற்சி நுணுக்கங்களை கற்றுக்கொடுக்கிறாராம்.