ரஜினி, தனுஷ்க்கு நன்றி தெரிவித்த விஷால் | மகாநதி டப்பிங்கை முடித்தார் சமந்தா | புதிய படத்திற்கு தயாராகும் ராம்சரண் | தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைகிறது | ஆதாரம் உள்ளது - ஜீவிதாவிற்கு ஸ்ரீரெட்டி பதில் | ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து லோக் ஆயுக்தா : கமல் | மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார் டிடி | ஒரு பட நடிகையின் அலம்பல் | கிராமத்து பெண்ணாக நடிக்க ஷாலினி பாண்டே ஆர்வம் | ஸ்ரீரெட்டிக்கு எதிராக போராட்டம்: நடிகை கைது |
அரண்மனை-2, நாயகி என சில ஹாரர் படங்களில் நடித்துள்ள த்ரிஷா, தற்போது மாதேஷ் இயக்கத்தில் நடித்திருக்கும் மோகினி படம் அவரை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்லும் படமாக வெளிவர இருப்பதாக சொல்கிறார்கள். காரணம், எத்தனையோ பேய் படங்கள் வந்து கொண்டிருந்தபோதும் இந்த படம் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்குமாம். பேய் படம் என்றாலே கத்தல், கதறல், அலறல், மிரட்டல் என்றுதான் அதிரடியாக படமாக்குவார்கள். ஆனால் இந்த மோகினி படம் அமானுஷ்ய உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாம்.
அதோடு, இந்த படத்தில் வைசாலி-வைஷ்ணவி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. அதில் ஒருவர் பிளாஷ்பேக்கில் வந்து செல்வாராம். இந்த இரண்டு வேடங்களிலும் ஒன்றுக்கொன்று சாயல் இல்லாத வகையில், மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுத்திருக்கிறாராம் த்ரிஷா. அதற்காக அவர் நிறைய ஹோம் ஒர்க்கும் செய்துள்ளாராம். ஆக இத்தனை வருட சினிமா பயணத்தில் த்ரிஷாவுக்கு இந்த மோகினி அழுத்தமான முத்திரை பதிக்கும் படமாக இருக்கும் என்கிறார்கள்.