நடிக்க வருவதற்கு முன்பு கொத்தனார் வேலைக்கு சென்ற காளி வெங்கட் - Kaali venkat work as Mason before coming to cinema
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிக்க வருவதற்கு முன்பு கொத்தனார் வேலைக்கு சென்ற காளி வெங்கட்

21 ஏப், 2017 - 15:29 IST
எழுத்தின் அளவு:
Kaali-venkat-work-as-Mason-before-coming-to-cinema

இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங்கின் அப்பாவாக நடித்து கவனிக்கப்படும் நடிகரானவர் காளி வெங்கட். அதற்கு முன்பு வரை காமெடியனாக மட்டுமே இருந்து வந்த அவரை இப்போது மாறுபட்ட கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் ஹீரோவின் நண்பன் என்பதை தாண்டி தற்போது குணசித்ர நடிகர் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார் காளி வெங்கட்.


மேலும், யதார்த்த மனிதரான காளிவெங்கட், தன்னைப்பற்றிய விசயங்களையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அந்த வகையில், சினிமாவில் நடிகராவதற்கு முன்பு சொந்த ஊரான கோவில்பட்டியில் இருந்தபோது எனது தந்தையுடன் கொத்தனார் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது வேலை முடிந்து கை கால்களை கழுவிக்கொண்டு வந்ததும் சம்பளம் கொடுப்பார்கள். கையில் ஈரம் காய்வதற்கு முன்பு சம்பளத்தை வாங்குவோம். அது மனதுக்கு நிறைவாக இருக்கும்.


அதேபோல் இப்போது சில தயாரிப்பாளர்களும் நடித்து முடித்ததும் உடனே சம்பளத்தை தருகிறார்கள். அப்போது எனக்கு கொத்தனார் வேலை செய்து விட்டு ஈரம் காய்வதற்கு முன்பு சம்பளம் வாங்கிய அந்த பழைய ஞாபகங்கள் தான் மனதில் வந்து செல்லும். என்ன இருந்தாலும் வியர்வை சிந்தி உழைத்த உழைப்புக்கு உடனடியாக கூலி கிடைப்பதில் இருக்கிற சந்தோசம் எதிலும் இருக்க முடியாது என்கிறார் காளி வெங்கட்.


Advertisement
மகாபாரதம் பற்றிய கருத்து: கமல் ஆஜராக கோர்ட் உத்தரவுமகாபாரதம் பற்றிய கருத்து: கமல் ஆஜராக ... மெடிக்கல் திரில்லர் கதையில் ஐங்கரன் மெடிக்கல் திரில்லர் கதையில் ஐங்கரன்


வாசகர் கருத்து (3)

Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22 ஏப், 2017 - 09:27 Report Abuse
Susil மேலும் வளர வாழ்த்துக்கள்.
Rate this:
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
22 ஏப், 2017 - 01:57 Report Abuse
Vasanth Saminathan நல்ல நடிகர். முண்டாசுப்பட்டியில் அற்புதமான ஸ்லாங், கவுன்ட்டர் கொடுத்தார்.
Rate this:
Dol Tappi Maa - NRI,இந்தியா
21 ஏப், 2017 - 18:45 Report Abuse
Dol Tappi Maa அதற்க்கு முன்பே முண்டாசுப்பட்டி படத்தில் போட்டோ ஸ்டூடியோ அசிஸ்டன்ட் ஆக இவர் கலக்கியிருப்பார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film thiri
  • திரி
  • நடிகர் : அஸ்வின் காக்மானு
  • நடிகை : சுவாதி ரெட்டி
  • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்
  Tamil New Film Ivan Yaarendru Therigiradhaa
  Tamil New Film Ivalunga Imsai thangamudiyala
  Tamil New Film Ivan Thandhiran
  • இவன் தந்திரன்
  • நடிகர் : கவுதம்
  • நடிகை : ஸ்ரத்தா ஸ்ரீந‌ாத்
  • இயக்குனர் :கண்ணன்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in