‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஹாலிவுட்டிலும் கால்பதித்துவிட்டனர். இவர்களில் தீபிகா படுகோனே நடித்த டிரிபிள் எக்ஸ் படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. தீபிகாவை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா, ‛பேவாட்ச்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ராவுடன் பிரபல மல்யுத்த வீரரும், நடிகருமான ராக் எனும் டுவைன் ஜான்சன் முதன்மை ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்டில்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் தற்போது பிரியங்கா சோப்ராவை முன்னிலைப்படுத்தி ‛பேவாட்ச்' படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பிரியங்கா சோப்ரா, சன்கிளாஸ் அணிந்தபடி புன்னகையுடன் போஸ் தருகிறார். அந்த கண்ணாடியில் பேவாட்ச் படத்தில் நடித்த நடிகர்கள் தோன்றுகிறார்கள். பேவாட்ச் படம் வருகிற மே 25-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.