சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தெலுங்கு சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். கடந்த 2013ல். 'அத்ரேண்டிக்கு தாரெதி' படத்தில் பவன் கல்யாணை வைத்து ஹிட் கொடுத்தவர் இப்போது நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் பவன் கல்யாணின் படத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, இன்னொரு கதாநாயகியாக மலையாள நடிகை அனு இம்மானுவேல் நடிக்கிறார். இவர் நிவின்பாலிக்கு ஜோடியாக 'ஆக்சன் ஹீரோ பிஜூ' படத்தில் நடித்தவர்.
இந்தப்படத்தில் என்ன ஸ்பெஷல் என்றால் இது பவன் கல்யாணின் 25வது படமாகும். இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க சோனு சூட் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் இப்போது இவர் இந்தப்படத்தில் அவர் நடிக்கவில்லை என தெரியவந்துள்ளது.. ஏற்கனவே த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் டைரக்சனில் 'அத்தடு', ஜூலாயி' ஆகிய படங்களில் சோனு சூட் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.