கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
ஆபாச நடிகையான சன்னி லியோன், பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது விளம்பர படங்களிலும் கல்லா கட்டி வருகிறார். சமீபத்தில் இவர் காண்டம் விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இதற்கு பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இதுபோன்ற விளம்பரங்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த எதிர்ப்பு பற்றி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சன்னி லியோனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛ஒரு நாட்டில் உள்ள குடிமகனுக்கு எது வேண்டும், வேண்டாம் என்பதை அந்நாட்டு அரசு தான் முடிவு செய்ய வேண்டும். நான் உட்பட வேறு யாரும் இது பற்றி முடிவு செய்ய முடியாது. இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடு. இந்த ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக பேச அனைவருக்கும் உரிமை உள்ளது. மக்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று நான் கூற முடியாது. ஆகையால் இந்த விஷயத்தில் நான் செய்ய வேண்டும் என்பதே அரசே முடிவு செய்யட்டும், இதுப்பற்றி நான் வேறு எதுவும் பேச விரும்பவில்லை'' என்று கூறியுள்ளார்.