இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கபீர்கான் - சல்மான் கூட்டணியில் உருவாகியுள்ள மற்றுமொரு படம் தான் ‛டியூப்லைட்'. எல்லையை ஒட்டி நடக்கும் போர் சம்பவங்களையும், அதனுடன் ஒரு உணர்வுப்பூர்வமான விஷயத்தையும் படத்தில் சொல்ல இருக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சல்மான்கான் அதிகாரப்பூர்வமாக இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் சல்மான் கான் மிகவும் எளிமையாக, கழுத்தில் தனது ஷூவை தொங்கவிட்டபடி தோன்றுகிறார். அவரது போட்டோவுக்கு கீழே போர் நடக்கும் பின்னணி காட்சிகள் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. வருகிற ரம்ஜான் பண்டிகையின் போது படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.