மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சோனாக் ஷி சின்கா நடித்த நுார் படம், விரைவில் வெளியாகவுள்ளது. இதில், ஹீரோ என குறிப்பிட்டுச் சொல்லும்படி யாரும் இல்லை. சோனாக் ஷி சின்கா தான் எல்லாமே. இந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, உள்நாடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும், அடிக்கடி, 'டூர்' அடித்து வருகிறார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும்போது, அவர் அணிந்து வரும் உடைகள், வித்தியாசமான வடிவமைப்புடன் உள்ளதாக, பாலிவுட்டில் உள்ள ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிடுகின்றன. இதுவரை, உடைகள் விஷயத்தில் அவ்வளவு ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த சோனாக் ஷி, தன் காதலர் பன்ட்டி சஜ்தேயின் ஆலோசனையின்படி, பிரத்யேக உடை வடிவமைப்பாளரை நியமித்துள்ளாராம். அவரது கைவண்ணம் காரணமாகவே, விதம் விதமான உடைகளில் ஜொலிக்கிறாராம், சோனாக் ஷி.