பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாகி வருகிறது. சஞ்சய்யாக ரன்பீர் கபூர் நடிக்க அவருடன் அனுஷ்கா சர்மா, தியா மிஸ்ரா, சோனம் கபூர், பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்தப்படத்தில் சஞ்சய்யின் நண்பரும், நடிகருமான சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்தி வெளியானது. ஆனால் இதை சஞ்சய் தத் மறுத்துள்ளார்.
இதுப்பற்றி சஞ்சய் தத் கூறியிருப்பதாவது... ‛‛எனது வாழ்க்கை படத்தில் உருவாகும் கதைக்கு சல்மான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க தேவையில்லை என்று நினைக்கிறேன், சல்மான் மட்டுமல்ல பிற நட்சத்திரங்களும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அவசியம் இருக்காது'' என்று கூறியுள்ளார்
சஞ்சய் தத் வாழ்க்கை படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸாக இருக்கிறது.