தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் அக்சைகுமார் நடித்து வரும் புதிய படம் பத்மன். இப்படத்தை ஆர்.பால்கி இயக்குகிறார். டுவிங்கிள் கண்ணா தயாரிக்கும் இப்படத்தில் சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். டில்லியில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், கவுரவ வேடம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை, தனது கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கு சேனிட்டரி நாப்கின்களை தயாரித்து வழங்கி வரும் ஒருவரின் உண்மை வாழ்க்கையை மையாக கொண்டது. அமிதாப் பச்சன் நடித்தால் ராசி என டைரக்டர் ஆர்.பால்கி நம்புவதால், இப்படத்தில் அவரை நடிக்க வைக்க தீர்மானித்தாராம். இதற்கு முன் பால்கி, தனது கி அண்ட் கா படத்திலும் கவுரவ வேடத்தில் நடிக்க வைக்க அமிதாப்பிடம் பேசினாராம்.