இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
ஹிந்தி நடிகரும்,பா.ஜ., - எம்.பி.,யுமான, வினோத் கன்னா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா, 70. பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் தொகுதி, பா.ஜ., - எம்.பி.,யான இவர், சில தினங்களுக்கு முன், உடல் நலக்குறைவால், மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.உடலில் நீர் சத்து குறைந்த தால், பாதிக்கப்பட்டுள்ளார்;
அவருக்கு, டாக்டர்கள்சிகிச்சையளித்து வருகின்றனர் என, அவரது மகன் ராகுல் கன்னா கூறியிருந்தார்.இந்நிலையில், வினோத் கன்னாவுக்கு புற்றுநோய் இருப்பதாகவும், இதனால் உடல் மெலிந்து பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி, அவரது புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.வினோத் கன்னாவிற்கு, புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.