'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'பிரியங்கா சோப்ராவின் திரையுலக வாழ்க்கையில் இனிமேல் இறங்குமுகமே இல்லை; ஏற்றம் மட்டும் தான்' என, கொண்டாடி குதுாகலிக்கிறது, பாலிவுட். அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும், 'புஜ்நெட்' என்ற இணையதளம், உலகிலேயே மிகவும் அழகான பெண் யார் என்ற கருத்து கணிப்பை நடத்தியது. இதில், இரண்டாவது இடத்தைபிடித்துள்ளதுடன், ஹாலிவுட் நடிகையர் ஏஞ்சலினா ஜோலி, எம்மா வாட்சன் போன்றவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிஉள்ளார், பிரியங்கா. இந்த கருத்து கணிப்பு, ஹாலிவுட்டில் தனக்கு பெரிய அளவில் பிரபலத்தை தரும் என, மகிழ்ச்சியுடன் கூறுகிறார், அவர். அதெல்லாம் சரி; இந்த கருத்து கணிப்பில் முதலிடத்தை பெற்று, உலகின் மிக அழகான பெண் என்ற பட்டத்தை தட்டிச் சென்றது யார் தெரியுமா? மற்றொரு பிரபல ஹாலிவுட் நடிகை பியான்ஸ்.