ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஷாரூக்கானும் ஒருவர். தற்போது, இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஷாரூக் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, ஆனால் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
இந்நிலையில், இப்படத்திற்கான பாடல் உரிமையை பிரபல பாடல் நிறுவனம் ஒன்று ரூ.15 கோடிக்கு வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் பீரிதம் சக்ரவர்த்தி தான் பெயரிடப்படாத இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தில் 6 பாடல்கள் உள்ளதாம். தொடர்ந்து படப்பிடிப்பு லூதியானாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஷாரூக்கானின் இந்தப்படம், அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியாகி வரும் ‛டாய்லெட் ஏக் பிரேம் கதா' படத்துடன் ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸாக உள்ளது.