இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. விஷால் தலைமையிலான அணியினர் பெரும்பான்மையான பதவிகளைக் கைப்பற்றி எதிரணியினருக்கு அதிர்ச்சி அளித்தனர். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை முன்னிட்டு தேர்தலில் போட்டியிட விஷால் தலைமையிலான அணியினர் சில மாதங்களுக்கு முன்பே தங்களது பணியை ஆரம்பித்தனர்.
விஷாலை இந்தத் தேர்தலில் போட்டியிட விடக் கூடாதென்று முந்தைய நிர்வாகிகள் அவரை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தே நீக்கினர். அதைத் தொடர்ந்து விஷால் நீதிமன்றம் வரை சென்று தன்னுடைய நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்று மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் இணைந்தார். அவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின்னும், அவருடைய வேட்பு மனுவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். அதிலும் விஷாலே வெற்றி பெற்றார்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால், ராதாகிருஷ்ணன், கேயார் ஆகியோரது தலைமையில் மற்ற பதவிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தலைவர் பதவிக்கு மட்டும் டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன் தனியாக நின்றனர். பின்னர் கலைப்புலி எஸ்.தாணு முயற்சியால் அவர்களிருவரும் போட்டியிலிருந்து விலகி ராதாகிருஷ்ணன் அணிக்கு ஆதரவு அளித்தனர். இதனால், ராதாகிருஷ்ணன் அணியே வலுவான அணி என அவர்கள் தரப்பில் தங்களது அணியே வெற்றி பெறும் என உறுதியாக நம்பி வந்தார்கள்.
இந்தத் தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக தாணு தீவிரமாகச் செயல்பட்டார் என சிலர் தெரிவித்த நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வந்ததுமே ராதாகிருஷ்ணன் தரப்பினரே தாணுவைப் பற்றி கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி விட்டார்களாம். முந்தைய காலகட்டத்தில் தயாரிப்பாளராக இருந்த தாணுவுக்கும், பொருளாராக இருந்த ராதாகிருஷ்ணனுக்கும் இடையே பிரச்சனை இருந்தததாம். அதை மனதில் வைத்துக் கொண்டு அவர் வகுத்துக் கொடுத்த வியூகம்தான் ராதாகிருஷ்ணன் அணியின் தோல்விக்குக் காரணம் என்கிறார்கள். தேர்தல் முடிவுகள் குறித்து தாணுவை விமர்சித்து மீம்ஸ்கள் கூட வலம் வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
முந்தைய நிர்வாகத்தில் தாணு தனி அணியாகவும், டி. சிவா தனி அணியாகவும், ராதாகிருஷ்ணன் தனி அணியாகவும் செயல்பட்டதாகச் சொல்கிறார்கள். அவர்களுக்குள் இருந்த பிரச்சனையே விஷால் தரப்பில் புதிதாக ஒரு அணி களத்தில் இறங்கக் காரணமானது என்றும் பேசிக் கொள்கிறார்கள்.
கேயார் அணியில் பல சீனியர் உறுப்பினர்கள் நின்றாலும் போட்டியிட்ட பலரும் வயதானவர்கள் என்பதே அந்த அணியின் தோல்விக்குக் காரணம் என்கிறார்கள். இருந்தாலும் அவரது செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட கதிரேசன் வெற்றி பெற்றதும், அவர்களது அணியில் 4 செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
மாறாக ராதாகிருஷ்ணன் தலைமையிலான அணியில் முக்கியப் பதவிகளில் யாருமே வெற்றி பெறவில்லை. கேயார் அணியில் போட்டியிட்ட கதிரேசன் செயலாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் அணி சார்பாகப் போட்டியிட்டவர்களில் டி.ஜி.தியாராஜன், கே.பாலு ஆகிய இரண்டு செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.
கேயார் அணி சார்பாக மனோஜ்குமார், பி.எல்.தேனப்பர் ஆகிய இரண்டு செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையில் புதிய அணி போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதேபோல தற்போது தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் விஷால் தலைமையில் புதிய அணி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.
முந்தைய தயாரிப்பாளர் சங்கம் சிறப்பாகச் செயல்படவில்லை. பைரசி போன்ற விஷயங்களில் அவர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என விஷால் தேர்தலுக்கு முன்பே குற்றம் சாட்டியிருந்தார்.
இப்போது அவர் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆனதுமே புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு சவால் விட்டுள்ளார்.
இனி, அம்மாதிரியான பைரசி இணையதளங்களில் புதிய படங்கள் வெளிவருவதை முதலில் தடுக்க வேண்டிய சவால் விஷால் முன்பு உள்ளது. அதை அவர் செய்து காட்டினாலே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிடும்.
மேலும், தயாரிப்பாளர் சங்கத்தை புதிய வழியில் அவர் நடத்திச் செல்வார் என தயாரிப்பாளர்கள் தரப்பிலும் எதிர்பார்ப்பு உள்ளது.
தொலைக்காட்சி உரிமைகள், பட வெளியீட்டுச் சிக்கல்கள், நடிகர்களின் சம்பளம் என பல விஷயங்களை சரிக்கட்டி, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய பெரிய பொறுப்பு விஷால் தலைமையிலான அணிக்கு உள்ளது.
நடிகர் சங்கத்திற்கு புதி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி கடந்த வாரத்தில் பெரிதும் பேசப்பட்டார். அடுத்த சில நாட்களிலேயே தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியையும் பெற்றுள்ளார்.
நடிகர் சங்கத்தில் மாற்றம் வந்தது போலவே தயாரிப்பாளர் சங்கத்திலும் மாற்றம் வருமா என்பது விஷால் கையில்தான் உள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பட்டியல்
தலைவர்
விஷால்
துணைத் தலைவர்கள்
கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ்
செயலாளர்கள்
கே.இ. ஞானவேல்ராஜா
கதிரேசன்
பொருளாளர்
எஸ்.ஆர்.பிரபு
21 செயற் குழு உறுப்பினர்கள்
சுந்தர் .சி
பார்த்திபன்
பாண்டிராஜ்
ஆர்.வி.உதயகுமார்
மன்சூர் அலிகான்
எஸ்.எஸ்.துரைராஜ்
ஆர்.கே.சுரேஷ்
ஆர்யா
எஸ்.ராமச்சந்திரன்
ஜெமினி ராகவா
அபினேஷ் இளங்கோவன்
எ.எல்.உதயா
எம்.கஃபார்
பிரவீன்காந்த்
மனோஜ்குமார்
பி.எல்.தேனப்பன்
எஸ்.வி.தங்கராஜ்
கே.பாலு
எம்.எஸ்.அன்பு
எஸ்.எஸ்.குமரன்
டி.ஜி.தியாகராஜன்