இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
நடிகர் சஞ்சய் தத், சமீபத்தில் தனது பூமி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தார். இப்படத்தை ஓமங் குமார் இயக்குகிறார். பூஷண்குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகை அதிதி ராவ், சஞ்சய் தத்தின் மகளாக நடிக்கிறார். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றின் போது அதிதி ராவிடம், சஞ்சய் தத்துடன் நடித்த அனுபவம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அதிதி, சஞ்சய் தத்துடன் நடித்தது மிகவும் அற்புதமான அனுபவம்.சூப்பர் அற்புத அனுபவம் என்றே சொல்வேன். அவருக்கு காயம் ஏற்பட்டது. இருந்தும் சஞ்சய் ஒரு ரியல் ஹீரோ. ஆக்ஷன் காட்சிகளின் போது காயம் பட்டாலும், அடுத்த நிமிடமே எழுந்து, சூட்டிங்கை முடித்து கொடுப்பார். ஒட்டுமொத்த சீனையும் அவர் ஒரே டேக்கில் நடித்து முடித்து விடுவார் என்றார்.