'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை வித்யாபாலன் நடித்துள்ள பேகம் ஜான் படம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாக உள்ளது. பெங்காலி மொழியிலிருந்து ரீமேக் செய்யப்பட்டுள்ள இப்படம், பாலியல் தொழில் செய்யும் பெண்களை பற்றியது. இப்படத்தை ரிலீஸ் செய்ய பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானிலும் பேகம் ஜான் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், படத்தில் ஆபாச வார்த்தைகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக கூறி உள்ள சென்சார் போர்டு, 12 காட்சிகளை நீக்க உத்தரவிட்டுள்ளது. ஆபாச வார்த்தைகள் இடம்பெற்ற காட்சிகளை மட்டுமின்றி, படத்தில் வித்யாபாலன் பேசும் குரலை சத்தத்தையும் குறைக்கவும் அறிவுறுத்தி உள்ளது.
நெருக்கமான காட்சி ஒன்றையும் நீக்க சென்சார் போர்டு உத்தரவிட்டதால், அந்த காட்சி ஏறக்குறைய நீக்கப்பட்டு விட்டது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் டிரைலரில் இல்லாமல், படத்தில் மிக அதிக அளவில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக சென்சார் போர்டு கூறி உள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
படம் ரிலீஸ் செய்வதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் 12 காட்சிகளை நீக்க சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளதால் பாகிஸ்தானை தொடர்ந்து, இந்தியாவிலும் இப்படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது.