ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் வாரிசு நடிகை சோனாக்ஷி சின்ஹா. முன்னணி நடிகையாக இருக்கும் சோனாக்ஷி, தற்போது ‛நூர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இன்னும் சிலவாரங்களில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது. சோனாக்ஷி, பன்ட்டி சஜ்தேவ் என்பவருடன் காதல் வயப்பட்டுள்ளதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வெகுநாட்களாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சோனாக்ஷியிடம், திருமணம் பற்றி கேட்டபோது, அவர் பதிலளித்தாவது... ‛‛தற்போது திருமணம் செய்யும் இல்லை, அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். நான், எந்த மாதிரி ஒருவரை திருமணம் செய்ய போகிறேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் அப்படி, இப்படி என்று பேசுகிறார்கள். இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை'' என்று கூறியுள்ளார்.