ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கெளதம் மேனனுக்கு தற்போது சிரம திசை போல. அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் பாதியில் நிற்கிறது. தனுஷ் ஹீரோவாக நடிக்க எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை ஆரம்பித்தார் கௌதம் மேனன். சில பிரச்னைகளால் அப்படம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் முடங்கிப்போயின. அதன் பிறகு பஞ்சாயத்து நடைபெற்று பின்னர் படப்பிடிப்பு நடைபெற்றது.
எனை நோக்கி பாயும் தோட்டா தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் படத்தை ஜூன் மாத இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் இசை அமைப்பாளர் யார் என்பதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார் கௌதம் மேனன்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக சொல்லப்பட்டது. கடைசியில் தர்புகா சிவாதான் இசையமைத்துள்ளார். ஆனால் அதை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் உள்ளார். தனுஷுக்கு ஜோடியாக புதுமுகம் மேகா ஆகாஷ் நடித்துள்ளளார். எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை தெலுங்கிலும் வெளியிடும் திட்டத்தில் பாகுபலி ராணாவை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்திருக்கிறார் கௌதம் மேனன். ரம்ஜான் விருந்தாக இப்படம் திரைக்கு வருகிறது.