இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சல்மான்கானுடன் சுல்தான், அமிதாப் பச்சன் உடன் சர்கார்-3 படங்களில் நடித்து விட்ட நடிகர் அமித் சாத், அடுத்தப்படியாக அக்ஷ்ய் குமாருடன் ‛கோல்டு' படத்தில் நடிக்கிறார். இதை அவரே உறுதி செய்துள்ளதுடன், அக்ஷ்ய் படத்தில் நடிப்பதை எண்ணி மகிழ்ச்சி கொண்டுள்ளார். இதுகுறித்து அமித் கூறியிருப்பதாவது... ‛‛அக்ஷ்ய் குமாரின் தீவிர ரசிகன் நான். சினிமாவில் அவரது அர்ப்பணிப்பு, தேர்ந்தெடுத்து அவர் நடிக்கும் படங்கள்... உள்ளிட்ட பல விஷயங்களை பார்த்து வியந்தேன். அவருடைய படத்தில் நானும் நடிக்கிறேன் என்று எண்ணும்போது மகிழ்ச்சியாகவும், அதிக ஆர்வமும் உள்ளது'' என்று கூறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து தங்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த பல்வீர் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து ‛கோல்டு' படம் உருவாக உள்ளது. இப்படத்தை ரீமா காக்தி இயக்க, எக்சல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்தாண்டு சுதந்திர தினத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.