பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கிரிக்கெட் வீரர், விராட் கோஹ்லியின் காதல் இளவரசி அனுஷ்கா சர்மா, பார்ப்பதற்கு மென்மையானவராக தோற்றமளித்தாலும், மனதளவில் தைரியமான பெண்ணாக இருக்கிறார். 'இப்போதெல்லாம், வெயிட்டான ரோலில் நடிக்கிறீர்களே' என, கேட்டால், 'துவக்கத்தில் சில உப்புமா ரோல்களில் நடித்தேன். இப்போது, எனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். இரண்டு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி விட்டு செல்ல, நான், சாதாரண பெண் அல்ல' என, ஆவேசமாக பேசுகிறார். 'எவ்வளவு நாட்களுக்கு படங்களில் நடிப்பேன் என தெரியவில்லை. ஆனால், மற்ற நடிகையரில் இருந்து மாறுபட்டு இருக்க விரும்புகிறேன். எனக்கென தனித்துவம் வேண்டும்; அப்படிப்பட்ட படங்களில் மட்டுமே நடிப்பேன்' என்கிறார், அனுஷ்கா.