இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமூக வலைத்தளங்களை வைத்துக் கொண்டு பலர் பல விதத்தில் சம்பாதித்து வருகிறார்கள். அதிலும் பிரபலங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 1 லட்சம் ஃபாலோயர்களை வைத்திருக்கும் சாதாரண மனிதர்களே லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் போது மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களை வைத்திருக்கும் பிரபலங்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியும்.
சில பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் பணத்தைப் பெறுகிறார்கள் என்று சொல்கிறார்கள். ஒரே சமயத்தில் பல லட்சம் பேருக்கும் சென்று சேரும் விதத்தில் சில வியாபாரப் பொருட்களைப் பற்றி பிரபலங்களைப் பதிவிட வைக்கிறார்கள்.
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான சல்மான் கான் அவர் நடித்துள்ள கூலிங் கிளாஸ் விளம்பரப் படம் ஒன்றின் வீடியோவை அவருடைய டிவிட்டரில் பதிவிட சுமார் 10 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். ஒரே ஒரு டிவீட்டிற்கு இவ்வளவு பணமா என ஆச்சரியத்தில் மூழ்கிக் கிடக்கிறது பாலிவுட் வட்டாரம்.
பாலிவுட்டில் அதிகமாக சம்பாதிக்கும் நடிகர்களில் சல்மான் கானும் ஒருவர். எந்தெந்த வழிகளில் எல்லாம் பணம் சம்பாதிக்கலாம் என்பதை சல்மானைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.