தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
வருண் தேஜ் நாயகனாக நடிக்கும் மிஸ்டர் திரைப்படத்தின் பாடல்களை தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி வெளியிடவுள்ளார். இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் வருண் தேஜிற்கு ஜோடியாக லாவண்யா திரிபதி, ஹீப்பா பட்டேல் நடிக்கும் மிஸ்டர் படத்திற்கு கோபி மோகன் கதை எழுத ஸ்ரீதர் திரைக்கதை அமைத்து வசனம் எழுதியுள்ளார். மார்ச் 30ல் ஐதராபாத்தில் நடைபெறவுள்ள மிஸ்டர் பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடல்களை வெளியிடவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகன் வருண் தேஜ் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதன் பேரில் சிரஞ்சீவி மிஸ்டர் ஆடியோ ரிலீஸில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஏப்ரல் 14ல் மிஸ்டர் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.