பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல மலையாள இயக்குனர் கமல் டைரக்சனில் தற்போது இந்தி மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் 'ஆமி' என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் மஞ்சு வாரியர். கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் மாதவிக்குட்டியாக பிறந்து நாவல்கள், சிறுகதைகள் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த எழுத்தாளராக உருவெடுத்து, இஸ்லாமல் ஈர்க்கப்பட்டு தனது 67வது வயதில் இஸ்லாமிய மதத்திற்கு கமலா சுரையாவாக மாறிய பெண்மணியின் சுயசரிதையைத்தான் படமாக இயக்குகிறார் கமல்.
சமீபத்தில் இந்தப்படத்தில் மஞ்சுவாரியரின் ஆமி கேரக்டரின் பர்ஸ்ட் லுகை வெளியிட்டார் கமல்... மஞ்சுவின் தோற்றமே மாறியிருப்பது கண்டு அவரது ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தனர் சமீபத்தில் 'ஆமி' பட ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு வந்த கமாலா சுரையாவின் சகோதரி, மஞ்சு வாரியாரை பார்த்து திகைத்துப்போய், “எங்க அக்கா சின்ன வயதில் எப்படி இருந்தாங்களோ, அவரே என் கண்முன்னால் நிற்பதுபோல இருக்கிறது” என பாராட்டினாராம். இதுதான் மஞ்சு வாரியருக்கும் தனது படத்துக்கும் கிடைத்த முதல் பாராட்டு என்கிறார் இயக்குனர் கமல்.