பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உலகம் முழுவம் உள்ள மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சேனல் நேஷனல் ஜியாக்ரபி. தமிழ் மொழி உள்பட 60க்கும் மேற்பட்ட மொழிகளில் ஒளிபரப்பாகிறது.
இந்த சேனல் இந்துக்களின் புனித ஸ்தலமா திருப்பதியை பற்றி திருமலா திருப்பதி இன்சைட் ஸ்டோரி என்ற பெயரில் ஒரு ஆவண படத்தை தயாரித்துள்ளது. திருப்பதியில் பக்தர்கள் எப்படி குவிகிறார்கள். அவர்கள் பெருமாளை தரிசிக்க என்னென்ன வசதிகள் செய்து தரப்படுகிறது. தினமும் பல லட்சம் பேர் சாப்பிட உணவு எப்படி தயாரிக்கப்படுகிறது. தேவஸ்தான நிர்வாகம் எப்படி செயல்படுகிறது. லட்டு எப்படி தயாரிக்கப்படுகிறது. கோவில் வரலாறு மற்றும் திருவிழாக்கள் என திருப்பதி பற்றிய முழுமையான தகவல் தொகுப்பாக இந்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளர்.
இதற்காக நேஷனல் ஜியாகிரபி குழுவினர் 6 மாதமாக திருப்பதியில் தங்கியிருந்து இந்தப் படத்தை எடுத்துள்ளனர். இந்தப் படம் நாளை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அவசியம் காண வேண்டிய ஆவணப்படம்.