விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'நான் பிழைப்பேனோ' என்ற பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'மறுவார்த்தை..' பாடல் வெளியான போதும், படத்தின் டீசர் வெளியான போதும் கூட படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை.
இசையமைப்பாளர் யார் என்பதை அறிவிப்பதில் கௌதம் மேனன் தேவையில்லாமல் 'பில்ட்-அப்' கொடுத்து வருவதாகப் பலரும் கருதுகிறார்கள். படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்று மக்களுக்குத் தெரியுமா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக 'Whos Mr X ?' என்ற தலைப்பில் ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். அதில் பொதுமக்கள் பலரிடம் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கு யார் இசையமைப்பாளராக இருப்பார்கள் என்று கேட்டு பேட்டி எடுத்திருக்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் சொல்லிக் கொடுத்ததைப் போல பல்வேறு பெயர்களைச் சொல்கிறார்கள். அதில் ஒருவர் மறைந்த இசையமைப்பாளர் எம்எஸ்வி பெயரைக் கூட சொல்லியிருக்கிறார்கள். தாங்கள் உண்மையாகவே இந்த வீடியோவை எடுத்தோம் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக அந்தப் பதிலைக் கூட நீக்காமல் வீடியோவை வெளியிட்டிருப்பது எம்எஸ்வி-க்கே செய்யும் அவமரியாதை தான்.
எதற்கு இந்த தேவையில்லாத 'பில்ட்-அப்' என்றே தெரியவில்லை. ஏ.ஆர்.ரகுமான் தவிர வேறு யார் படத்திற்கு இசையமைப்பாளராக இருந்தாலும் அது பெரிய ஈர்ப்பைக் கொடுக்கப் போவதில்லை. ஏற்கெனவே, படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா என்று செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் படத்தை ஓட வைக்க கௌதம் மேனன் என்னென்னவோ செய்கிறார்.
அந்த வீடியோவில் பலரும் கையில் மொபைலைக் காட்டிக் காட்டிப் பேசுகிறார்கள். அவர்கள் யாருமே 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் பாடலை இதுவரை கேட்டதில்லை போலிருக்கிறது. அவர்களிடம் பாடலைப் போட்டுக் காட்டித்தான் யார் இசையமைப்பாளர் என்று கேட்டிருக்கிறார்கள். மண்டையை மறைத்தவர்கள், கொண்டையை மறைக்க மறந்துவிட்டார்கள்.