'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் இயக்குனராகவும், நடிகராகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களில் சமுத்திரக்கனி முக்கியமானவர். அவரது இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த 'அப்பா' திரைப்படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டதுடன், வசூல் ரீதியாகவும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
தற்போது 'தொண்டன்' என்ற படத்தை இயக்கி நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தை அடுத்து 'அப்பா' படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்து இயக்குகிறார் சமுத்திரக்கனி. தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் மலையாளத்தில் ஜெயராம் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது. மலையாளத்தில் இப்படத்திற்கு 'ஆகாச மிட்டாய்' எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
சமுத்திரக்கனி மலையாளத்தில் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், படத்தை இயக்குவது இதுவே முதல் முறை. 'அப்பா' போன்ற கதைகள் எந்த மொழியாக இருந்தாலும் நல்ல வரவேற்பைப் பெறும்.