தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்திய திரையுலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் பாகுபலி-2 படத்தின் இசையை, நடிகர் ரஜினிகாந்த் வெளியிட உள்ளார். இதற்கான விழா சென்னையில், பிரமாண்டமாய் நடைபெற இருக்கிறது.
‛பாகுபலி' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் உருவாகியுள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர், உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட 7-வது டிரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்நிலையில் டிரைலருக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால் படக்குழு உற்சாகமாகியுள்ளது. அதோடு படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாய் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்.,8-ம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில், மாலை 6 மணிக்கு பாகுபலி 2 இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினி கலந்து கொண்டு, படத்தின் இசை வெளியிட உள்ளார். தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி கலைஞர்களையும் அழைத்து விழாவை இன்னும் சிறப்பாக நடத்த உள்ளனர்.
பாகுபலி-2 படம் வருகிற ஏப்.,28-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில், இந்தியா முழுக்க சுமார் 6500 தியேட்டர்களில் படம் ரிலீஸாக இருக்கிறது.