இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, ஏராளமான படங்களில் காமெடி நடிகையாக வலம் வருபவர் ஆர்த்தி. நடிகர் கணேஷை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் தற்போதும் பல படங்களில் காமெடி கலந்த வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகையாக மட்டுமல்லாது அதிமுக.,வில் உறுப்பினராக இருந்த ஆர்த்தி, அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்து வந்தார். தேர்தல் சமயத்தில் அதிமுக.,விற்கு ஆதரவாக ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தார். இந்நிலையில், அதிமுக.,விலிருந்து விலகி கொள்வதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக., கட்சி பிளவுப்பட்டுள்ளது. சிறை சென்றுள்ள சசிகலா தலைமையில் இயங்கும் அதிமுக.,வை ஏற்க மனமின்றி அவர் கட்சியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக.,வில் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகர் ஆனந்த்ராஜ், இதைகருத்தை வலியுறுத்தி கட்சியிலிருந்து விலகி வந்தது குறிப்பிடத்தக்கது.