மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தெலுங்கில், ஜூனியர் என்டிஆர்., காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஆக்ஷ்ன் படம் ‛டெம்பர்'. பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். தற்போது இப்படம் பாலிவுட்டில் ரீ-மேக்காக உள்ளது. பிரபல இயக்குநர் ரோகித் ஷெட்டி இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக ரன்வீர் சிங் நடிக்கிறார்.
தெலுங்கு டெம்பரில் நடித்த காஜலையே, இந்தி ரீ-மேக்கிலும் நடிக்க வைக்க ரோகித் ஷெட்டி எண்ணியுள்ளார். ஏற்கனவே சிங்கம், ஸ்பெஷல் 26 போன்ற படங்களில் காஜல், நடித்திருப்பதால் அவரையே இதில் நடிக்க வைக்கலாம் என்று ரோகித் விரும்புகிறாராம். இதுதொடர்பாக அவரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இதுப்பற்றி காஜல் அகர்வாலை கேட்டால், திறமையான நடிகர் ரன்வீர் சிங், அவரது படத்தில் நடிக்க ஆசை தான். சிங்கம் படத்திற்கு மீண்டும் ரோகித் ஷெட்டி படத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார்.