ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் அக்ஷ்ய் குமாரின் மனைவி டிவிங்கிள் கண்ணா. மாஜி ஹீரோயினான டிவிங்கிள், அக்ஷ்யை திருமணம் செய்த பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டிவிங்கிள், தனது கணவர் அக்ஷ்ய் நடிக்கும் ‛பேடுமேன்' படம் பற்றி பேசினார்.
அவர் பேசுகையில், ‛‛பேடுமேன் படத்தின் ஷூட்டிங் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. முருகானந்தமும் படத்தின் ஷூட்டிங்க் ஸ்பாட்டில் பங்கேற்று ஆலோசனை வழங்கி வருகிறார். அருமையான கதை, நிச்சயம் இப்படம் மக்கள் இடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். நானும் இந்தப்படத்தில் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்று எண்ணும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் டிவிங்கிள்.
பெண்களுக்கான சானிட்டரி நாப்கினை குறைந்த விலையில் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த, தமிழர் அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து ‛பேடுமேன்' படம் உருவாகி வருகிறது. இதை பால்கி இயக்குகிறார். அக்ஷ்ய் உடன் ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.