ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக். இவருக்கும், இவரது மனைவி ஆலியா சித்திக்கிற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வது போன்றும், நவாசுதீன் வேறு ஒரு பெண்ணை காதலிப்பது போன்றும்... ஒரு மேகஸினில் சமீபத்தில் செய்தி வெளியானது. இது நவாசுதீனை மட்டுமல்ல பாலிவுட் பிரபலங்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தனது கணவரை பிரியவில்லை என்று நவாசுதீன் மனைவி ஆலியா மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பிய சம்பந்தப்பட்ட மேகஸினுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் நவாசுதீன்.