தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சல்மான் தயாரிப்பாளராக உருவெடுத்த ‛ஹீரோ' படத்தில் தான் ஹீரோவாக அறிமுகமானார் சூரஜ் பஞ்சோலி. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் தயாரிப்பாளரின் கையை கடிக்காத அளவுக்கு தப்பித்து கொண்டது. இந்நிலையில், ஹீரோ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. இதில் சூரஜ் பஞ்சோலியே ஹீரோவாக தொடர உள்ளார். பரூக் கபீர் இயக்குகிறார். ரொமான்ட்டிக், த்ரில்லர் படமாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்திற்காக சூரஜ், தனது உடல் எடையை குறைக்க உள்ளார். தற்போது அதற்கான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் சூரஜ். மஸ்கட்டில் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. தொடர்ந்து ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.