Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் வழக்கில் புதிய திருப்பம்: அங்க அடையாளங்கள் மாற்றம்

20 மார், 2017 - 19:24 IST
எழுத்தின் அளவு:

மதுரை: நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் நவீன சிகிச்சை முறையில் மாற்றப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களது மகன், எங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மேலூர் கோர்ட், நடிகர் தனுசை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்தும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரியும் நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அங்க அடையாளங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


நடிகர் தனுஷ் சார்பில் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டது. சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்களை ஒப்பிட்டு பார்க்க, நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, நடிகர் தனுஷ் மதுரை, ஐகோர்ட் கிளையில் நேரில் ஆஜரானார். தொடர்ந்து அரசு மருத்துவர் முன்னிலையில் தனியறை ஒன்றில் தனுஷூக்கு அங்க அடையாளங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.


இந்நிலையில் இன்று (மார்ச்-20ல்) கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையில், நடிகர் தனுஷ் உடலில் உள்ள அங்க அடையாளங்கள் நவீன சிகிச்சை முறையில் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இவ்வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை மார்ச்-27 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.


Advertisement
மணிரத்னத்துடன் 25 வருடம் பயணம் - ரஹ்மான் பெருமிதம்மணிரத்னத்துடன் 25 வருடம் பயணம் - ... சினிமாவிற்கு துரோகம் செய்தால் சும்மா விடமாட்டேன் : விஷால் ஆவேசம் சினிமாவிற்கு துரோகம் செய்தால் ...


வாசகர் கருத்து (3)

Gnani - Casabalanca,மொராக்கோ
21 மார், 2017 - 14:05 Report Abuse
Gnani அனேகன் - நல்ல நடிகர்
Rate this:
Ram - Tiruchirappalli,இந்தியா
21 மார், 2017 - 07:35 Report Abuse
Ram பணம், புகழ் இரண்டும் உண்மையான போதையைவிட மோசமானது என்பதற்கு இந்த செய்தி ஒரு நல்ல உதாரணம். அனைத்து சினிமா உலகமும் தனுஷை கஸ்தூரி ராஜா மகன் என்று கூறுகிறது. உண்மை என்ன என்பது தனுஷுக்குத்தான் தெரியும்.
Rate this:
shiva - tirunelveli  ( Posted via: Dinamalar Windows App )
20 மார், 2017 - 22:42 Report Abuse
shiva silra paya
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rangoon (Tamil)
    • ரங்கூன்
    • நடிகர் : கெளதம் கார்த்திக்
    • இயக்குனர் :ராஜ்குமார் பெரியசாமி
    Tamil New Film Kaaviyan
    • காவியன்
    • நடிகர் : ஷாம்
    • நடிகை : ஸ்ரீதேவி குமார்
    • இயக்குனர் :பார்த்தசாரதி
    Tamil New Film Vilayattu Aarambam
    Tamil New Film Sathya
    • சத்யா
    • நடிகர் : சிபிராஜ்
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in