ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரேமம் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் படத்தில் நாகசைதன்யா நடித்து வருகின்றார். நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் இப்படத்தை அவரது தந்தையும், நடிகருமான நாகார்ஜூனா தனது அண்ணபூர்னா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். இப்படத்தின் தலைப்புடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டரை தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதியில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. நாகார்ஜூனா மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் சொக்கடே சின்னி நயன எனும் வெற்றிப்படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணா அடுத்ததாக இப்படத்தை இயக்குகின்றார். ஆக்ஷ்ன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஐதரபாத்தில் நடைபெற்று வருகின்றன.