ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் ஹிட் கொடுத்த காமெடி படங்களில் பக்ரே படமும் ஒன்று. இப்படம் 2013-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது . முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது . இப்படத்தை எக்செல் எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது . இயக்குநர் மிரிக்தீப் சிங் லம்பா இப்படத்தை இயக்கிவருகிறார் . பக்ரே-2விற்கு பக்ரே ரிட்டர்ன்ஸ் என்று பெயரிட்டுள்ளது படக்குழு. சமீபத்தில் பக்ரே ரிட்டர்ன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டு இருக்கிறது படக்குழு. பக்ரே ரிட்டர்ன்ஸ் படம் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாக இருக்கிறது. புகிட் சாம்ராட், அலி பசல், ரிச்சா சத்தா, வருண் சர்மா ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். பக்ரே ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு மும்பை, புது டில்லி மற்றும் தென் ஆப்ரிக்காவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.