Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நான் பொது சொத்தல்ல ரசிகரிடம் வித்யாபாலன் கோபம்

15 மார்,2017 - 16:01 IST
எழுத்தின் அளவு:

செல்பி எடுக்கிறேன் பேர்வழி என்று ரசிகர் ஒருவர் தோளில் கைபோட்டதால் அவர் மீது கோபத்தை வெளிப்படுத்தினார் நடிகை வித்யாபாலன். பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகைகளில் வித்யாபாலனும் ஒருவர். வித்தியாசமான ரோல்களில் மிகவும் போல்ட்டான வேடங்களில் நடிப்பவர். இவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‛பேகம் ஜான். பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.


இந்நிலையில் இப்படம் தொடர்பாக வித்யாபாலன், இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி உள்ளிட்டோர் கோல்கட்டா சென்றுள்ளனர். அங்கு விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர், வித்யாபாலன் உடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அவரும் சம்மதம் சொல்ல, அந்த ரசிகர்கள் வித்யாபாலன் அருகில் நெருங்கி வந்ததோடு அவர் தோள் மீது கைப்போட்டு செல்பி எடுக்க முன்வந்துள்ளார். உடனே, வித்யாபாலன் அந்த ரசிகரை எச்சரித்துள்ளார். ஆனாலும் அந்த ரசிகர் மீண்டும் அவர் தோள் மீது கைப்போட்டு செல்பி எடுக்க முயல, அந்த ரசிகரிடம் இது சரியில்லை, இதுபோன்று நடப்பது தவறு என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினார் வித்யாபாலன். வித்யா, தன் குரலை சற்று உயர்த்தி பேசியதுமே அந்த ரசிகர் உடனடியாக அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். அவர் இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


இதுப்பற்றி வித்யாபாலன் கூறுகையில், ‛‛ஆணாக இருக்கட்டும், பெண்ணாக இருக்கட்டும், பொதுவாக முகம் தெரியாத ஒருவர் திடீரென நெருங்கும் போது சற்று அசவுகரியமாக இருக்கும். பிரபலமான நான் பொதுவானவர் தான்... ஆனால் பொது சொத்து அல்ல என்றார்.


Advertisement
அக்ஷ்ய் குமாரின் அடுத்தப்படம் ‛முகுல்'அக்ஷ்ய் குமாரின் அடுத்தப்படம் ... சர்ச்சைக்கு அமைதியான பதிலடி! சர்ச்சைக்கு அமைதியான பதிலடி!


வாசகர் கருத்து (7)

Endrum Indian - Kolkata,இந்தியா
16 மார்,2017 - 15:57 Report Abuse
Endrum Indian "பணம் கொடு அப்புறம் பார் என்னை" "பணம் கொடுக்காமல் என்னை தொட்டே, பார்த்துக்க ஜாக்கிரதை" நான் யார் என்று நான் நடிக்கும் படம் பார்த்தால் புரியும் "பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை"
Rate this:
sundar raja - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16 மார்,2017 - 18:53Report Abuse
sundar rajado you have any sense...
Rate this:
16 மார்,2017 - 12:42 Report Abuse
PrasannaKrishnan Well said mam.
Rate this:
sri - trichy,இந்தியா
16 மார்,2017 - 10:54 Report Abuse
sri dear beta, do not talk bad about ladies. if they are actress, it does not mean you can talk and do what ever you want. even if they are call girls also you can not talk like this. if your sister and mother is a actress will you talk like this. there may be some people will be like this in all field but do not generalise. even if they are like that what about you. you do not want to pay their price and want to enjoy in free. they are not like TNGOVT to give free everything.
Rate this:
christ - chennai,இந்தியா
15 மார்,2017 - 18:47 Report Abuse
christ கோடிகளை அள்ளி கொடுத்தால் கை என்ன ? காலையும் கூட போடலாம்
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
16 மார்,2017 - 04:50Report Abuse
RaajaRaja Cholankaalai mattuma ?...
Rate this:
varun - tamilnadu,இந்தியா
15 மார்,2017 - 16:39 Report Abuse
varun பொது சொத்து அல்ல... ரேட் கொஞ்சம் ஜாஸ்தி ஓகேனா, கையவை இல்லனா நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தேன்னு புகார் பண்ணிடுவேன் பாவனா மாதிரி...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film EN AALODA SERUPPA KAANOM
  Tamil New Film Vivegam
  • விவேகம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : காஜல் அகர்வால் ,அக்ஷரா ஹாசன்
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film thappu thanda
  • தப்புதண்டா
  • நடிகர் : சத்யா (புதுமுகம்)
  • நடிகை : சுவேதா கய்
  • இயக்குனர் :ஸ்ரீகண்டன்
  Tamil New Film thiri
  • திரி
  • நடிகர் : அஸ்வின் காக்மானு
  • நடிகை : சுவாதி ரெட்டி
  • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in