அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோவான அக்ஷ்ய் குமாரிடம் ஏகப்பட்ட படங்கள் கைவசம் உள்ள நிலையில், மேலும் மேலும் புதிய படங்கள் கமிட்டாகி வருகின்றன. சமீபத்தில் சுபாஷ் கபூர் - அக்ஷ்ய் குமார் கூட்டணியில் வெளிவந்த ஜாலி எல்எல்பி-2 படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இவர்கள் மீண்டும் இணைய முடிவெடுத்தனர். அதன்படி இவர்கள் இணையும் புதிய படத்திற்கு ‛முகுல்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் டி-சீரிஸ் ஆடியோ நிறுவன புகழ் குல்சன் குமாரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக உள்ளது. தற்போது திரைக்கதை உருவாக்கும் பணி நடக்கிறது. இந்தாண்டு இறுதியில் படத்தை ஆரம்பித்து, அடுத்தாண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.