அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
மலையாளத்தில் தனது நண்பர் சித்தார்த் சிவா இயக்கும் 'சகாவு' படத்தில் நடித்து முடித்துவிட்டார் நிவின்பாலி. இந்தப்படத்தில் அவருடன் மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக 'காக்கா முட்டை' புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, இன்னொரு கதாநாயகியாக காயத்ரி சுரேஷ் என்பவர் நடிக்கிறார். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்கள் தங்களுக்குள் 'தோழரே' என மரியாதையாக அழைத்துக்கொள்வது போல கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் ஒருவரை ஒருவர் 'சகாவு' என அழைப்பது வழக்கம். டைட்டிலுக்கு ஏற்றமாதிரி இந்தப்படத்தின் கதையும் அரசியல் களத்தை மையப்படுத்தியே பின்னப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில் நிவின்பாலி அரசியல் தலைவர் கேரக்டரில் நடித்திருக்கிறார்.. இப்படி ஒரு அரசியல்வாதி நமக்கு கிடைகமாட்டாரா என மக்கள் ஏங்கும் விதமாக இவரது கேரக்டர் இருக்குமாம்.. கடந்த பத்து மாதங்களில் எந்த படத்தையும் ரிலீஸ் செய்யாத நிவின்பாலி, இந்தப்படத்தை சித்திரை விஷு கொண்டாட்டமாக களம் இறக்குகிறார்.. ஏப்-14ல் தான் ரிலீஸ் செய்ய முதலில் தீர்மானித்திருந்தார்.
ஆனால் சித்திரை விஷு மற்றும் புனித வெள்ளி ஆகிய இரண்டு பண்டிகைகளும் ஒரே நாளில் வருவதால் அன்றைய தினம் பொதுமக்கள் தியேட்டர்களுக்கு அவ்வளவாக வர மாட்டார்கள்.. அதனால் வசூல் பாதிக்கும் என்பதால் ஒருநாள் தள்ளி ஏப்-15ஆம் தேதி சனிக்கிழமை படத்தை வெளியிடுகிறார்.. போட்டிக்கு வேறு படங்கள் எதுவும் இல்லாத நிலையில் தற்போதைய நிலவரப்படி தனி ஆளாகத்தான் களமிறங்குகிறார் 'சகாவு'.