'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ்' என்கிற படத்தை மலையாள திரையுலகமும் ரசிகர்களும் போட்டிபோட்டுக்கொண்டு புகழ்ந்து வருகிறார்கள்.. இத்தனைக்கும் சின்ன பட்ஜெட்டில் முற்றிலும் 85 புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் இது.. ஆனால் மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறாராம் இயக்குனர் லிஜோஜோஸ் பள்ளிசேரி. ஆர்யாவையும்-பிருத்விராஜையும் வைத்து 'டபுள் பேரல்' என்கிற பிளாப் படத்தை கொடுத்த பின், இந்தப்படத்தின் மூலம் பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்திருக்கிறார் லிஜோஜோஸ் பள்ளிசேரி.
குறிப்பாக இவர் படத்தின் க்ளைமாக்ஸை கையாண்டவிதம் பிரமிப்பூட்டுவதாக இருக்கிறதாம். இதனால்தான் இதுநாள்வரை எந்தப்படத்தையும் அவ்வளவு எளிதாக மனம் திறந்து பாராட்டியிராத மோகன்லாலே இந்தப்படத்தை பார்த்துவிட்டு 'சூப்பர்' என சர்டிபிகேட் கொடுத்துவிட்டார் என்றால் சும்மாவா..? இங்கே தமிழில் புதுமை படைப்புகளை முன்னேடுத்து வைக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூம் இந்தப்படத்தை பார்த்துவிட்டு “பெண்டாஸ்டிக் படம்.. மைண்ட்ப்ளோயிங் க்ளைமாக்ஸ்.. டெக்னிக்கலாக அனைத்து ஏரியகளிலும் அசத்தியுள்ளார்கள்” என படத்தை பற்றி ஆஹோ, ஓஹோ என தனது பாராட்டுக்களை வெளிப்படுத்தியுள்ளார்.