பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூரின் டுவிட்டர் கணக்கை மர்மநபர்கள் யாரோ ஹேக் செய்துவிட்டனர், இதுதொடர்பாக போனி, போலீசில் புகார் அளித்துள்ளார். சமீபகாலமாக சினிமா பிரபலங்களின் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் அதிகளவில் ஹேக் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பாடசி சுசித்ரா, நடிகை மடோனா செபாஸ்டியன்... என பலர் தங்களது டுவிட்டரை யாரோ ஹேக் செய்துவிட்டனர் என புகார் அளித்தனர். இப்போது அந்த வரிசையில் போனி கபூரும் இணைந்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர், நடிகை ஸ்ரீதேவியின் கணவர் ஆவார். இவரது டுவிட்டரை யாரோ மர்ம நபர்கள் ஹேக் செய்துவிட்டு, சினிமா துறையில் உள்ளவர்களுக்கு மெசேஜ் செய்து பேடிஎம் கணக்கில் 10 ஆயிரம், 5 ஆயிரம் டெபாசிட் செய்யுங்கள் என கேட்டுள்ளனர். இது போனி கபூரின் கவனத்திற்கு வந்தபோது, உடனடியாக தனது டுவிட்டர் பாஸ்வேர்ட்டை மாற்றிவிட்டார். அதோடு, மும்பை போலீஸிடம் புகார் அளித்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.