இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை தீபிகாவை, பிரியங்கா என்று அழைத்து தொடர்ந்து வெறுப்பேற்றி வருகிறது வெளிநாட்டு மீடியாக்கள். பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை சென்றுவிட்டர்கள் பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே. தீபிகாவிற்கு முன்னமே பிரியங்கா ஹாலிவுட் சென்றுவிட்டதால் அவர் அங்கு மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறார். ஆனால் பிரியங்காவின் முதல் ஹாலிவுட் படமான பேவாட்ச் வெளியாகும் முன்பே தீபிகா நடித்த டிரிபிள் எக்ஸ் படம் ரிலீஸாகிவிட்டது.
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார் தீபிகா. அப்போது விமான நிலையத்தில் இருந்த மீடியாக்கள், தீபிகாவை, பிரியங்கா... பிரியங்கா... என்று அழைக்க, எதுவும் பேசாமல் அமைதியாக காரில் ஏறி பறந்துவிட்டார்.
தீபிகாவை பிரியங்கா என்று தவறுதலாக அழைப்பது இது முதன்முறையல்ல, ஏற்கனவே பல முறை நிகழ்ச்சிகளில் அவரை பிரியங்கா என்று அழைத்துள்ளார்கள். தொடர்ந்து இதுபோன்று தன்னை பிரியங்கா... பிரியங்கா... என்று அழைப்பது தீபிகாவை சற்று வெறுப்பேற்றி இருக்கிறது.