நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
பாலிவுட்டின் பிரபல ஹீரோக்களில் ஹிருத்திக் ரோஷனும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‛காபில்'. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‛தூம்-4' படத்தில் நடிக்கிறார் ஹிருத்திக். தொடர்ந்து, இயக்குநர் கபீர்கான் இயக்க இருக்கும் அடுத்தப்படத்தில் நடிக்க இருக்கிறார் ஹிருத்திக். இந்தப்படம் உறுதியாகியுள்ளது. ரொமான்ட்டிக் படமாக உருவாக உள்ள இப்படத்தை சாஜித் தயாரிக்க உள்ளார். இதுமிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராக உள்ளது. மேலும் படமும் நீண்ட நாட்களாக படமாக்கப்பட உள்ளது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்க உள்ளார்கள். தற்போது கபீர்கான், சல்மானின் ‛டியூப்லைட்' படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீஸானதும் ஹிருத்திக் பட பணிகளை துவக்க உள்ளார்.