'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் வித்யாபாலனும் ஒருவர். இவர், தற்போது ‛பேகம் ஜான் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டைட்டில் ரோலிலேயே அவர் நடிக்கிறார். பாலியல் தொழில் செய்யும் 11 பெண்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், வித்யாபாலன் உடன் நஸ்ருதீன் ஷா, இலா அருண், பல்லவி சாரதா, ரஜித் கபூர், ஆஷிஸ் வித்யார்த்தி, விவேக் முஷ்ரன், சங்கி பாண்டே, பூனம் சிங் ராஜ்புட், ரிதிமா திவாரி, பிளோரா சைனி, பிரியங்கா, சுமித் நிஜ்வான் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்குகிறார் . ‛பேகம் ஜான் படத்தை மகேஷ் மற்றும் முகேஷ் பட் தயாரிக்கிறார்கள். ‛பேகம் ஜான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் வித்யாபாலன், கையில் ஹூக்காவுடன் கொஞ்சம் செக்ஸியாக போஸ் கொடுக்கிறார். கூடவே படத்தின் போஸ்டரில் ‛‛என் உடம்பு, என் வீடு, என் நாடு, என் விதிமுறை'' என்ற அடைமொழியும் இடம் பெற்றுள்ளது. பேகம் ஜான் படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாகிறது.