Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

திறமையிருந்தால் யாரும் தடுக்க முடியாது - வித்யூத் ஜம்வால்

02 மார், 2017 - 16:48 IST
எழுத்தின் அளவு:
If-you-have-talent,-no-one-to-control-you-says-Vidyut-Jamwal

அஜித்தின் பில்லா-2, விஜய்யின் துப்பாக்கி படங்களில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜம்வால். தனது அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகளால் ரசிகர்களை கொள்ளை கொண்டவர். ரியல் பைட்டரும் கூட, ரிஸ்க்கான காட்சிகளையும் டூப்பின்றி தானே ஏற்று நடிப்பவர். இவர் பாலிவுட்டிலும் முன்னணி நடிகராக உள்ளார். வில்லன் ரோலாக மட்டுமல்லாது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். 2013-ம் ஆண்டு இவரது நடிப்பில் ‛கமாண்டோ' என்ற ஆக்ஷ்ன் படம் வந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக ‛கமாண்டோ-2' வெளியாக உள்ளது. கமாண்டோ-2 பற்றியும், அதில் நடித்த அனுபவம் பற்றியும், தன் சினிமா அனுபவம் குறித்த நமக்கு அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி இதோ...


* கமாண்டோ, கமாண்டோ-2 என்ன வித்தியாசம்.?


கமாண்டோவுக்கும், கமாண்டோ-2வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புதிய கதைகளத்தோடு கமாண்டோ 2 உருவாகியிருக்கிறது. கமாண்டோவில் ஆக்ஷ்ன் இருக்கும், ஆனால் கமாண்டோ-2வில் புது வித ஆக்ஷ்ன் இருக்கும். முதல் பாகத்தை விட 15 மடங்கு ஆக்ஷ்ன் காட்சிகள் இதில் இருக்கும். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கமாண்டோ-வை விட கமாண்டோ-2-வை இன்னும் பிரமாண்டமாய் இருக்கும்.


* கமாண்டோ-2 எப்படிப்பட்ட படம்.?


இது ஒரு ஸ்டைலீஷான மாடர்ன் படம். கறுப்பு பணத்தை பற்றி பேசப்போகிற படம். இதில் கேப்டன் கரண்வீர் சிங் எனும் ரோலில் நடிக்கிறேன். இது ஒரு ஆக்ஷ்ன் படமாக இருந்தாலும் அதில் காதல், ரொமான்ஸ் போன்ற விஷயங்களும் இருக்கும். இயக்குநர் தேவன், அதை சிறப்பாக கையாண்டுள்ளார்.


* சினிமா பின்னணி இல்லாமல் வந்ததால் பட வாய்ப்பு பெற சிரமங்கள் உள்ளதா...?


இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லலாம். ஏனென்றால் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் எனக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கிறது. திறமை இருந்தால் உங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இதுவரை எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. அதேசமயம், இதில் ஒரு சிக்கலும் உள்ளது. சினிமா பின்னணி இல்லாமல் வருபவர்களுக்கு ஒரு படம் தோல்வி அடைந்துவிட்டாலும் அடுத்தப்படம் கிடைப்பது கொஞ்சம் சிரமம். ஆனால் சினிமா பின்னணியோடு வருபவர்களுக்கு இந்த பிரச்னை இருக்காது.


* உங்களுக்கு முன்மாதிரி யாராவது உள்ளார்களா...?


உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நிறையபேரை முன்மாதிரியாக எடுத்து கொண்டேன். ஆனால் அதுவும் ஒருகாலக்கட்டம் வரை தான். பின்னர் என்னை நானே முன்மாதிரியாக எடுத்து கொண்டேன். என்னால் என்ன செய்ய முடியும், இன்னும் சிறப்பாக எப்படி செய்யலாம் என்று யோசித்து யோசித்து என்னை வளர்த்து கொண்டேன். என்னை நானே போட்டியாக எடுத்து கொண்டேன். ஆகையால் தனிப்பட்டு யாரையும் சொல்ல முடியாது.


* அஜய் தேவ்கனுடன் ‛பாத்சாகோ' படத்தில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்க...?


நல்ல கதையம்சம் உள்ள படம் பாத்சாகோ. அஜய், நான் மற்றும் ஒரு ராணி, எங்கள் மூவரை சுற்றியே நடக்கிற கதை. அஜய்யுடன் நடித்தது நல்ல அனுபவம். அவர் ஒரு சிறந்த நடிகர், அவரிடம் நிறைய விஷயங்களை கற்று கொண்டேன். சினிமா துறையில் அஜய், நம்மூரு ஆக்ஷ்ன் ஹீரோ.


* உங்களின் அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க.?


கமாண்டோ-2 படத்தை தொடர்ந்து திக்மான்சு இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் உடன் ‛யாரா' படத்திலும், அஜய்யுடன் ‛பாத்சாகோ' படத்திலும் நடிக்கிறேன். இதுதவிர ஜங்கிளி, ஆன்கென் 2 படங்களிலும் நடிக்கிறேன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in