ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் சாகித் கபூர், சைப் அலிகான், கங்கனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‛ரங்கூன். இரண்டாம் உலகப்போர் காலக்கட்டம், அதில் ஒரு முக்கோண காதல் கதை என வித்தியாசமான கதைக்களத்தை தந்த இயக்குநர், அதை திரைக்கதையாக்கும் விதத்தில் கோட்டை விட்டுள்ளார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் படத்தின் வசூலம் சுமார் ரகம் என்ற அளவில் தான் உள்ளது. இப்படம் வெளியான மூன்று நாளில் ரூ.18.80 கோடி வசூலித்திருக்கிறது.
‛ரங்கூன்' படம் வெளியான முதல் நாளில் ரூ.6.07 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.6 கோடியும், ஞாயிறு அன்று ரூ. 6.73 கோடியும் வசூலித்து இருக்கிறது. ‛ரங்கூன்' படம் மிகப்பெரும் பொருட்ச் செலவில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.