பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் பாக்யராஜ் நடித்த முந்தானை முடுச்சு படத்தின் மூலம் காமெடி நடிகனாக அறிமுகமாகி அனைவரையும் சிரிக்க வைத்த காமெடி நடிகர் சிட்டிபாபு என்ற தவகளை வயது 42 இன்று காலை வடபழனி ஆதிமூல பெருமாள் கோவில் தெருவில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு போதுமணி என்ற மனைவி இருக்கிறார். குழந்தைகள் கிடையாது.
நடிகர் தவக்களை, 1983 ம் ஆண்டு இயக்குனர் கே.பாக்யராஜ் நடித்த முந்தானை முடிச்சு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய 6 மொழிகளில் நடித்துள்ளார். அவர் இதுவரை 496 படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்துள்ளார்.
சொந்த ஊர் நெல்லூர். நெல்லூரில் அம்மா மற்றும் தங்கை ஆகியோர் இருக்கிறார்கள். இதுவரை தமிழில் 67 படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களிலும் நடித்து வந்தார். நேற்று முன்தினம் கேரளாவில் ஒரு மலையாள படத்தில் நடித்துவிட்டு விட்டிருக்கு வந்து இன்று காலை தூங்கி எழுந்த உடன் வாந்தி எடுத்துள்ளார். அவரது மனைவி தண்ணீர் கொடுக்க குடித்த பின் அவர் உடனேயே உயிரிழந்தார் என்று அவரது நண்பர்கள் கூறினார்கள்.
நாளை காலை 10 மணிக்கு ஏ.வி.எம் சுடுகாட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது.