ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை இன்று பரபரப்பாவதை யாராலும் தடுக்க முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டது. சமூக வலைத்தளங்களில் அப்படிப்பட்ட செய்திகள் வைரலாகப் பரவிவிடுகின்றன. காதல், திருமணம், பிரிவு என பிரபலங்களின் சொந்த வாழ்க்கை கூட செய்திகள்தான். அவர்களின் தனிப்பட்ட மன வலி அறிந்து சிலர் மட்டுமே கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள்.
நட்சத்திரத் தம்பதிகளான நாகார்ஜுனா - அமலாவின் மகன் அகில் திருமண விவகாரம் கடந்த வாரம் முழுவதும் மீடியாவிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், அது குறித்து இதுவரை சம்பந்தப்பட்ட யாருமே வாய் திறக்கவில்லை. அனைத்து ஊடகங்களிலும் அகில் திருமணம் ரத்து என்ற செய்தி வெளியாகிவிட்டது. தான் சார்ந்த எந்த ஒரு தவறான செய்தி வந்தாலும் அதை உடனுக்குடன் மறுக்கும் நாகார்ஜுனா இன்னும் தனது மகனின் திருமண ரத்து செய்தி பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.