Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிருத்விராஜ் பட ஷூட்டிங்கில் கலந்துகொண்ட பாவனா..!

26 பிப், 2017 - 11:38 IST
எழுத்தின் அளவு:
bhavana-back-in-the-shooting-sport-of-prithviraj-movie

சில நாட்களுக்கு முன் சிலரால் திட்டமிட்டு கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளாகி தப்பித்த நடிகை பாவனா, தைரியமாக குற்றவாளிகளை சுட்டிக்காட்டி அவர்களை சட்டத்தின் பிடியில் சிக்கவைக்கும் போராட்டத்திலும் இறங்கினார்.. நேர்ந்த துன்பத்தை கண்டு வெளியில் சொல்ல பயந்து வீட்டில் ஒடுங்கும் சராசரி பெண்ணாக இல்லாமல், போராட்ட குணத்தை வெளிப்படுத்திய பாவனாவின் இந்த துணிச்சலான முடிவை அனைவரும் பாராட்டினர். ஆனால் அதே சமயம் இனி என்னால் எப்படி நடிக்க முடியும்.. நடிப்பை விட்டே விலக முடிவெடுத்திருக்கிறேன் என்றும், குற்றவாளிகளை சட்டம் தண்டிக்கும் வரை நடிக்க மாட்டேன் என்று பாவனா சொன்னதாக தகவல்கள் வெளியாகின..


பாவனாவின் இந்த முடிவை கேட்ட பலரும் வருத்தப்பட்டதுடன், பாவனா தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு முன்புபோல நடிக்க வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக பாவனா அடுத்து நடிக்க இருந்த 'ஆடம்' படத்தின் ஹீரோவும் பாவனாவின் நெருங்கிய நண்பருமான பிருத்விராஜ் பாவனாவுக்கு தைரியமளித்து, அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டி, அவர் மீண்டும் நடிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதுதான் உன்னை அவமதிக்க நினைத்தவர்களுக்கு தரும் பதிலடியாக இருக்கும் என அவர் பாவனாவுக்கு ஆலோசனையும் வழங்கினாராம்.


அதன்படி நேற்று முதல் 'ஆடம்' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.. இந்தப்படத்தை ஜினு ஆப்ரஹாம் என்பவர் இயக்குகிறார்.. மிஸ்தி சக்கரவர்த்தி என்பவர்தான் கதாநாயகி.. இத்தனைக்கும் இதில் பாவனா பிருத்விராஜின் ஜோடியாக நடிக்கவில்லை.. ஆனால் மிக முக்கியமான கேரக்டராம். அதனால் தான் பாவனா நடித்தே ஆகவேண்டும் என பிருத்விராஜ் அவருக்கு ஊக்கம் கொடுத்தாராம். நேற்று படப்பிடிப்பின்போது வழக்கம்போல கலகலப்புடன் வளைய வந்த பாவனாவை பார்த்த பிருத்விராஜ், “மிகவும் தைரியமான என் தோழி திரும்பி வந்துவிட்டாள்” என தனது முகநூலில் பாராட்டு பத்திரம் வாசித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in